அறிக்கை: முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பாக நாங்கள் வகைப்பொறுப்பைக் கோருகிறோம்.

DOWNLOAD: (Tamil) Statement urging State Accountability on MMDA Reforms

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் (ACJU) தலைவரினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள, “முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்;தில் திருத்தங்கள் தேவையற்றன” என பொருள்படும் கூற்றுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை என கீழே ஒப்பமிட்டுள்ள நாங்கள் அனைவரும் காண்கிறோம். இவ் விவாக மற்றும், விவாகரத்துச் சட்டத் திருத்தமானது இன்றியமையாத தேவையாக இருக்கும் இக்காலகட்டத்தில் இச்சீர்திருத்தத்துக்கான செயல்முறையினை 8 வருடங்களாக இழுத்தடிப்புச் செய்ய ACJU பங்களித்துள்ளது என்பது தௌ;ளத் தெளிவாகியுள்ளது.

மேலும், அண்மைக்காலத்தில் ACJU வினால் முன்வைக்கப்பட்ட அளிக்கைகளாவன இலங்கை முஸ்லிம்களின் தற்கால வாழ்வின் நடைமுறை யதார்த்தங்களை முழுமையாக புறக்கணித்தே வரையப்பட்டுள்ளன. உதாரணமாக, சிறுவர் திருமணங்களை நியாயப்படுத்தும் வகையிலும், பெண்கள் காதி நீதிபதிகளாக வருவதனை தடை செய்யும் வகையிலும் பிழையான முறையில் இஸ்லாமிய சட்டங்கள் பொருள் செய்யப்பட்டுள்ளமையானது எமது மனச்சாட்சியை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இவர்களின் வாதமானது, பெண்களை காதி நீதிபதியாக நியமிக்கும் ஒருவர் “பாவமான செயலைச்”; செய்கின்றார் என்பதாகவும், அத்தகைய நியமனங்கள் செல்லுபடியற்றவை என்பதாகவும், “பெண்ணின் தீர்ப்புக்கு பெறுமதி இல்லை” என்பதாகவும் பிரேரிக்கும் ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இவை தற்கால இலங்கைக்கு மட்டுமன்றி உலகின் எந்த ஒரு பகுதியை எடுத்துக் கொண்டாலும் இந் நிலைப்பாடுகள் பெண்வெறுப்பினை அடிப்படையாகக் கொண்ட, பாரபட்சமான, பழமைவாதம் வாய்ந்தவை.

எனவே சட்டத்திருத்தம் தொடர்பாக ACJU வின் அண்மைக்கால எதிர்ப்புக்கள் மத்தியில் நாங்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றோம்.

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தக் குழுவின் அங்கத்தவர்களுக்கு:
நீதியரசர் சலீம் மர்சூப் அவர்களின் தலைமையிலான 2009 ம் ஆண்டின் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தக் குழுவானது இன்னும் தனது அறிக்கையினை சமர்ப்பிக்காமல் மேலும் மேலும் இழுத்தடிப்பதையிட்டும், இதன்மூலம் சில கடும்போக்கு சிந்தனை கொண்ட, முழு இலங்கை முஸ்லிம்களையும் பிரதிபலிக்காத சில உறுப்பினர்களின் கைகளில் நியாயமற்ற முறையில் இச்சட்டத் திருத்தமானது சிறைப்பட அனுமதித்திருப்பதையுமிட்டு நாங்கள் மிகவும் விசனமடைந்துள்ளோம். இவ்வறிக்கையை வெளியிடுமாறு 2016 காலப்பகுதியில் தொடர்ச்சியாகக் கோரப்பட்டும் அது வெளியிடப்படவில்லை. இப்போது இச்சீர்திருத்த வரைவு அறிக்கையை காணும் வாய்ப்பு உள்ள ACJU போன்ற, சீர்திருத்தத்தினை எதிர்க்கும் குழுக்கள் இதற்காக எதிர்ப்புக்களை திரட்டவும், பொது வெளியில் அவ் அறிக்கையை இழிவுபடுத்தவும் இவ் வரைபை பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

ACJU விற்கு மாத்திரம் அந்த அறிக்கையின் வரைபை காணும் வாய்;ப்பு இருப்பதும், அதற்கெதிராக மக்கள் எதிர்ப்பலையை உருவாக்க முனைவதும் இச்சீர்திருத்த குழுவின் நடவடிக்கைக்கு மட்டுமன்றி இவ்வறிக்கையின் வரைபை காணும் வாய்ப்பு அற்ற பெண்கள் குழுக்கள் உள்ளடங்கலாக அனைத்து பங்குதாரர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவதாய் உள்ளது.

அண்மைய நகர்வுகளை கருத்தில் கொண்டு இவ்வறிக்கையினை முற்றாக்கி, மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருப்பின் அதனை குறிப்பிட்டு, காலதாமதமின்றி மக்களுக்கு உடனடியாக வெளியிடும் படி உறுதியாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத அரசியல் தலைவர்களுக்கு:

ACJU இனால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்தும் அமைதியாக இருப்பது எமக்கு வேதனை அளிக்கின்றது. முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பாக இவர்களின் அலட்சியப்போக்கு மற்றும் இதற்குரிய தலைமைத்துவம் வழங்காமை என்பன முஸ்லிம் பெண்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் அநீதிகளை இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கச் செய்கின்றன. தெரிவு செய்யப்படாத மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத நிறுவனங்கள் முஸ்லிம் சமூகத்தினது எதிர்காலத்தினைத் தீர்மானிக்கவென இஸ்லாமிய நூல்கள் மற்றும் பாரம்பரியத்தினை மிகக் குறுகியதாகவும், சட்டத்தின் உண்மை நோக்கை கூறாமல் வெறும் வசனங்களுக்கான பொருள்கோடலை செய்வதன் மூலமும் தமது நிலைப்பாட்டை எடுக்கின்ற இத்தகைய சிந்தனைக்கு இந்த அரசியல்வாதிகளின் அமைதியின் விளைவாக இடமளிக்க வேண்டிய அபாயமிருப்பதாக நாம் நம்புகிறோம்.

இவர்களின் அறிக்கைகளும், அளிக்கைகளும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட நிறுவனங்களினதும், நடவடிக்கைளினதும் ஊடாக சமத்துவமின்மை மற்றும் பாரபட்சத்துக்கு இட்டுச் செல்கின்றன.

அரசியல் தலைவர்கள் சட்டத்திருத்த நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்துள் இருக்கும் பன்மைத்துவமான பார்வைகளை அங்கீகரித்தல் என்பதுடன் தாமதமின்றி முஸ்லிம் சமூகத்திலுள்ள பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் நியாயமானதைச் செய்வது தொடர்பாக உடனடியாக தமது கவனத்தைக் குவிக்க வேண்டும் என்று நாம் மீண்டும் அழுத்திக் கூறுகிறோம்.

முஸ்லிம் பெண்கள் மீதான துஷ்பிரயோக நடவடிக்கைகள், மற்றும் இந்த பிரச்சினைகளை பற்றி பேசும் முஸ்லிம் பெண்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் என்பன தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும் வெளிப்படையாக அதற்கெதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் முஸ்லிம் தனியார் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டிய தேவைக்கு சாதகமாக பதிலளிக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்.

இலங்கை அரசுக்கு:
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம், காதி நீதிமன்ற முறை என்பன அரசினால் ஸ்தாபிக்கட்டு, நிதியிட்டு நிர்வகிக்கப்படுவது பிரத்தியட்சமான உண்மையாகும். முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் ஒரு நியதிச்சட்டமாக இயற்றப்பட்டுள்ளதுடன் காதிநீதிமன்றினால் வழங்கப்படும் தீர்ப்புக்களாவன சட்டப்படி பிணைக்கும் என்பதுடன் அரச அதிகாரத்துடன் மட்டுமே நிறைவேற்றப்படலாம். எனவே அரசின் ஒரு சட்டமானது அதன் பிரசைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பது அரசின் தலையாய கடமையாக உள்ளதே அன்றி பால்நிலை சார் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் அநீதியையும் உருவாக்குவனவாக இருக்கக் கூடாது.

நாம் இலங்கை அரசாங்கத்தையும், அதனோடு தொடர்புபட்ட சகல அதிகாரதரப்பினரையும் இந்த பிரச்சினைகளை எடுத்துரைப்பதில் உள்ள காலதாமதத்தைப் பற்றியும், முஸ்லிம் சமூகத்துள் விளிம்பு நிலையிலிருக்கும் பெண்கள், சிறுமிகளின் குரல்கள் சமூகத்தின் நிலைப்பாடுகள் தொடர்பில் ஒரு முக்கிய பெறுமானம் உடையவை என்பதனை அங்கீகரிக்கும் படியும் கோருகின்றோம்.

இது தவிர முஸ்லிம் தனியார் சட்டச் சீர்திருத்த உறுதிப்படுத்தலுக்கு அப்பால், தாமதமின்றி 2017 CEDAW குழு பரிந்துரைகளை அமுல்படுத்தல் வேண்டும்:

  • சகல சட்டங்களும் நீதி மீளாய்வுக்கு உட்படும் வகையில் அரசியலமைப்பின் உறுப்புரை 16(1) இனை நீக்குக:
  • ஒரு முஸ்லிம் பெண் தான் விரும்பினால் முஸ்லிம் தனியார் சட்டத்தை விடுத்து பொதுத்திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்யக்கூடிய விருப்புரிமையினை வழங்கும் வகையில் பொதுத் திருமணக் கட்டளைச் சட்டத்தினைத் திருத்துக.
  • திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயதெல்லையினை அனைவருக்கும் 18ஆக அதிகரித்தல்.
  • பெண் ஒருவர் காதி நீதிபதியாக, காதிகள் சபையின் அங்கத்தவராக, திருமணப் பதிவாளராக, மத்தியஸ்த்தர்களாக நியமிக்கப்பட பெண்களுக்குள்ள தகுதியினை மட்டுப்படுத்தும் அனைத்து மட்டுப்பாடுகளையும் நீக்குக. மற்றும்,
  • நியதிச்சட்ட பாலியல் பலாத்கார குற்றமானது எதுவித விலக்களிப்புக்களும் இன்றி 16 வயதின் கீழான அனைத்து சிறுமிகளுக்கும் ஏற்புடைத்தாகும் வகையில் குற்றவியல் கோவையின் பிரிவு 363 இனை திருத்துக.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தத்தை வேண்டிக் குரல் கொடுத்தவர்கள் என்ற வகையிலும், இச்சட்டத்தினாலும், காதி நீதிமன்ற முறையினாலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும் முஸ்லிம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தமானது வகைப் பொறுப்புக் கூறுவதாக இருத்தல் அவசியம். ஆண்கள் ஆக்கிரமித்துள்ள, ஆணாதிக்க அரசியல் சூழலில், அவசரமாகவும் பொறுப்புணர்வுடனும், உடனடியாகவும் வகைப் பொறுப்புடனும் இது தொடர்பில் பாதிக்கப்பட்டோரின் மீது கரிசனை கொண்டு செயலாற்ற வேண்டிய அவசர தேவை எழுந்துள்ளது. இது தொடர்பான எமது கோரிக்கை சரளமானது:

சரியானதை செய்;, அதை இப்பொழுதே செய்!

நான் இந்த கையெழுத்திட